உள்ளூர் செய்திகள்

கோபி அருகே உள்ள அக்கரை கொடிவேரி ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மயானத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தரக்கூறி கிராம மக்கள் கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் குருமந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மேசை நாற்காலிகளை முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் வழங்கினார்.

கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற விதைகள் திருவிழாவில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 50 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எரம்பாளையம் பகுதியில் ரூ 14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் காசிபாளையம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பேனாக்கள் மற்றும் டேபிள், பெஞ்ச் வழங்கினார்

கோபிசெட்டிபாளையம் அருகேஉள்ள கொடிவேரி அணை வழியாக நேற்று பெய்த கனமழை காரணமாக அதிக அளவு உபரி நீர் வெளியேறி வருவதால் இன்று கொடிவேரி அணைக்கு வர சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளனர்.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்,100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வலியுறுத்தி 300 கும் மேற்பட்ட தொழிலார்கள் மனு அளித்தனர்.

வன விலங்குகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வலியுறுத்தியும், விவசாயிகள் மீது வழக்கு போடுவதை நிறுத்த வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கள்ளிப்பட்டியில் போராட்டம்.

கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயற்கை பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரியும், ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களை பழங்குடி பட்டியலில் சேர்த்திட வலியுறுத்தியும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மாநில தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கோபிசெட்டிபாளையம் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில் 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசானை எண் 243 ஐ ரத்து செய்யக்கோரி மறியல் போராட்டம்.
