கோபிசெட்டிபாளையம் அருகே தடப்பள்ளி வாய்க்கால் கரையில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிய கோபி நகராட்சி வாகனத்தை விவசாயிகள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கரட்டடிபாளையம் பகுதியில் இருந்து பங்களாபுதூர் செல்லும் சாலையில் தடப்பள்ளி வாய்க்கால் கரையில் கோபி நகராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் கொண்டுவரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதற்கு கொண்டு செல்லப்பட்டது,


இதனைக் கண்ட அப்பகுதி விவசாயிகள், வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற போது வாய்க்கால் கரையில் வாகனத்திலிருந்து கழிவுகளை கொட்டிக் கொண்டிருந்த நகராட்சி வாகனத்தை சிறைபிடித்து கோபி நகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நகராட்சி அதிகாரிகளிடம் விவசாயிகள், வாய்க்கால் கரையில் குப்பைகளை கொட்டுவது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர், இது குறித்து நகராட்சி அதிகாரிகள் வாகன ஓட்டுநர் சக்திவேலை பிடித்து விசாரணை செய்ததில், சக்திவேல் நகராட்சிக்கு சொந்தமான பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து குப்பைகளை வாங்கி கோபியில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்வதாக தெரிவித்து அங்கு இருந்த குப்பைகளை வாய்க்கால் கரையில் கொட்டியதாக அவர் தெரிவித்தார், தொடர்ந்து கொட்டப்பட்ட குப்பைகளை மீண்டும் வாகனத்தில் ஏற்றப்பட்டது,



மேலும் வாகன ஓட்டுநர் நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக செயல்பட்டு குப்பைகளை வாய்க்கால் கரையில் கொட்டியதாக நகராட்சி சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது, இது குறித்து வாகன ஓட்டுநர் சக்திவேல் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர்,
இதனைத் தொடர்ந்து வாகனத்தை சிறை பிடித்த விவசாயிகள் இதுபோன்ற ஏற்கனவே நடைபெற்றுள்ளதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவற்றை கரையில் கொட்டி தீ வைப்பதால் அருகில் உள்ள மரங்கள் எரிந்து சேதம் அடைவதுடன் அருகில் உள்ள விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.