சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம்-நம்பியூர் காவல்துறையினர் மற்றும் நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

ஈரோடு மாவட்டத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு..
நம்பியூர் காவல் துறையினர் மற்றும் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி நம்பியூர் பேருந்து நிலையம் வழியாக நம்பியூர் முக்கிய சாலைகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்று மீண்டும் நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவுற்றது
ஈரோடு மாவட்டத்தை போதை பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கு.ஜவகர் ஐபிஎஸ்., அவர்களின் ஆணையின்படி மாவட்ட காவல்துறையினர் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு கஞ்சா-கஞ்சா சாக்லேட், போதை மாத்திரைகள், குட்கா பான் மசாலா உள்ளிட்டவை பறிமுதல் செய்து வருகின்றனர்.இந்நிலையில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் துறையினர், பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது..
கோபி காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுபடி மற்றும் நம்பியூர் காவல் வட்ட ஆய்வாளர் அவர்கள் உத்தரவுபடி..
போதைப் பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முகாம் பேரணி பள்ளி மாணவர்கள் மூலமாக நடைபெற்றது.மேலும் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியில் , பள்ளி மாணவர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், நம்பியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எம்.கே. சண்முகம்,SSI MC. சண்முகம் என ஏராளமானோர் கலந்துகொண்டு . பொதுமக்களுக்கு போதை பொருள் ஒழிப்பு அவசியம் பற்றியும் அதன் தீங்கு பற்றியும், போதை வஸ்துகளை விற்பதும் வாங்குவதும் குற்றம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி பேரணி நடைபெற்றது.