கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயற்கை பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கோபிசெட்டிபாளையம் கச்சேரி மேடு பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் இயற்கை பேரிடர் காலங்களில் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது


இந்த நிகழ்ச்சியில், பேரிடர் காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கால்நடைகளை எவ்வாறு உயிருடன் மீட்பது, தொடர் மீட்பு பணியின் மூலம் பொதுமக்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பேரிடர் கால ஒத்திகை பயிற்சி பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும் வருவாய் துறை சார்பில் பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வுகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொது மக்களிடையே வழங்கப்பட்டது
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோபி வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.