உள்ளூர் செய்திகள்

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம், வெங்கடேஸ்வரா நர்சிங் கல்லூரி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சிறுவலூர் சார்பில் இலவச ரத்த அழுத்த மற்றும் நீரழிவு நோய் பரிசோதனை முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்

கோபிசெட்டிபாளையம் அருகே டி.என் பாளையம் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து சேதம் செய்வதை தடுக்க வலியுறுத்தி விவசாயிகள் பங்களாபுதூர் வனசரக அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நிகழ்ச்சி ,பேருந்து நிலையத்தில் நடைபெற்றது .

நெல்லை சிபிஎம் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாய முகாமில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபாலசுன்கரா கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அந்தியூர் வனசரகத்திற்குட்பட்ட கரும்பாறை என்ற இடத்தில் மின்சார வேலியில் சிக்கி சுமார் 20 வயதுடைய ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

கோபிசெட்டிபாளையம் புதுக்கரைபுதூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பூப்பு நன்னீராட்டு விழாவிற்கு தாய் மாமன் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சீர்வரிசை கொண்டு சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது

நம்பியூர் அருகே உள்ள அளுக்குளியில் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் 100 நாட்கள் வேலை வழங்க ஊராட்சி மன்ற தலைவரிடம் திட்டப் பணியாளர்கள் மனு அளித்தனர்.

கரட்டடிபாளையத்தில் கோபி யூனியன் சேர்மனின் கார் மோதியதில் பைக்கில் சென்ற சப் இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்தார்.
