கோபி அருகே உள்ள கடத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடத்தூர் காவல் நிலையம் சார்பில் மாணவ, மாணவிகளிடையே போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோபி அருகே உள்ள கடத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடத்தூர் காவல்நிலையம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு, குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில் கடத்தூர் இன்ஸ்பெக்டர் துரைபாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவியரிடையே மது,கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், குழந்தை திருமணத்தை தடுப்பதன் அவசியம் குறித்தும் விளக்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் வஜயகுமார், பள்ளி ஆசிரியர்கள், 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.