நம்பியூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதில் 8 வது ஊதிய குழு அமல்படுத்த வேண்டும்,பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணி இடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊழியர் சங்கத்தின் தலைவர் மகாலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர் கருப்புசாமி அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.