கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நிகழ்ச்சி, பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.


அதில் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கும் மற்றும் கடைக்காரர்களுக்கும் குப்பையை தரம் பிரித்து வழங்கிட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஆணையாளர் D.V. சுபாஷினி , நகர் மன்ற தலைவர் என். ஆர் . நாகராஜ், வார்டு உறுப்பினர்கள், துப்புரவு அலுவலர் சோழ ராஜ் , துப்புரவு ஆய்வாளர் நிரூபன் சக்கரவர்த்தி, நகராட்சி மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள், வணிக சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.