அரசியல் செய்திகள்

கோபி நகர திமுக சார்பில் பேருந்து நிலையம் முன்பு நகர செயலாளர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற கலைஞர் நினைவு தின நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் நல்லசிவம் கலந்து கொண்டு கலைஞர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பி.சண்முகசுந்தரம் நினைவேந்தல் நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு வி.பி.சண்முகசுந்தரம் உருவ படத்தை திறந்து வைத்தார்.

கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் தனியார் திரையரங்கு அருகே, தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரியும்,நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பருப்பு பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்களை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி உறுதியானதை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடிக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்.

கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் அரசு பள்ளியில் படித்து 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கதொகையும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கு டி.என்.பாளையம் ஒன்றிய திமுக சார்பில் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு கோபி நகர திமுக சார்பில் 30 வார்டுகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோபியில் ஆனந்தகுமார் தலைமையில் மாபெரும் ரத்த தானம் வழங்கினார்கள்.

நம்பியூரில் ஒன்றிய திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இன்று பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழைகளுக்கு சமபந்தி விருந்து சிறப்பாக நடைப்பெற்றது.

அகில இந்திய சான்றோர் மக்கள் கழக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கொங்கு மண்டல பொறுப்பாளர் B.கமல் அவர்கள் அங்கிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

கோபி அருகே உள்ள முருகன்புதூரில் பேருந்திற்காக காத்திருந்த கல்லூரி மாணவிகளிடையே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்கு சேகரித்தார்.
