நம்பியூர் ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் 101 வது பிறந்தநாள் விழா பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், ஒன்றிய பகுதிகளில் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


அதன் ஒரு பகுதியாக நம்பியூர் ஒன்றிய திமுக மற்றும் கோபி அரசு மருத்துவமனை இணைந்து ரத்த தான முகாம் நம்பியூர் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளரும், பேரூராட்சி தலைவருமான செந்தில்குமார் தலைமையில் கோபி அரசு மருத்துவமனை டாக்டர்.அப்புராஜ் முன்னிலையில் நடைபெற்ற ரத்த தான முகாமில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ரத்த தானம் அளித்தனர்.
ரத்த தானம் செய்தவர்களுக்கு அரசு சான்றிதழை டாக்டர். அப்புராஜூம், மரக்கன்றுகளை ஒன்றிய செயலாளர் செந்தில்குமாரும் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட நெசவாளர் அணி தலைவர் சண்முகம், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் அல்லாபிச்சை, கோபி அரசு மருத்துவமனை செவிலியர்கள், ரத்த வங்கி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.