கோபி நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி கோபி பேருந்து நிலையம் முன்பு நகர செயலாளர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 6வது நினைவு தினத்தை முன்னிட்டு கோபி நகர திமுக சார்பில் பேருந்து நிலையம் முன்பு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி கோபி நகர செயலாளர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்சாமி, மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், கலைஞர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் குள்ளம்பாளையம் கே.கே.செல்வன், கோபி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சிறுவலூர் முருகன், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் மற்றும் கோபி நகர இளைஞரணி அமைப்பாளர் விஜய் கருப்புசாமி, தலைமை கழக பேச்சாளர் குமணன், செயற்குழு உறுப்பினர், சென்னிமலை, வார்டு செயலாளர்கள் செந்தில்குமார்,பெருமாள் சாமி,வெங்கடேஷ்,
மணிகண்டன்,
காளீஸ்வரன்,
முத்துவீரன்,
ஸ்ரீதர்,
கனகராஜ்,
பூபதி,
குமாரசீனிவசன்,
ராஜா,
ராஜ்குமார்,
பாலகுமார்,
சரவணன்,
மதியழகன்,
சண்முகம்,
கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோபி நகர திமுக சார்பில் பேருந்து நிலையம் முன்பு நகர செயலாளர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற கலைஞர் நினைவு தின நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் நல்லசிவம் கலந்து கொண்டு கலைஞர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam