கிரைம் செய்திகள்

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி ஓம்சக்தி நகரில் பல் மருத்துவர் வீட்டின் பீரோவில் இருந்த 17 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோபி அருகே மொடச்சூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்ற கட்டிட தொழிலாளி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

கோபி அருகே உள்ள மேட்டுவலுவில் குழந்தைகளை கடத்த வந்ததாக கூறி பெண்ணை பிடித்து கோபி காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனமும் தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கால் துண்டான நிலையில் ஒருவர் பலி, மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நம்பியூர் வெள்ளகோயில் பாளையத்தில் சொத்திற்காக பெண்ணை கொலை செய்த மகன்,மருமகளை நம்பியூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபி அருகே உள்ள புதுக்கரைபுதூரில் இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி சிவில் இன்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தனியார் கல்லூரி பேராசிரியர் படுகாயமடைந்தார்.
