மது அருந்தும் பழக்கம் காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்த கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.திருப்பூர் அருகே உள்ள தியாகி குமாரன் காலனியை சேர்ந்தவர் இப்ராஹிம் பாட்சா40 வயதான இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.இதனால் கணவன்,மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுஇந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்படவே, கோபியில் உள்ள அவரது அண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார்அதைத்தொடர்ந்து கோபி வாய்க்கால் ரோட்டில் உள்ள மதுக்கடைக்கு சென்ற இப்ராஹிம் பாட்சா, மதுவில் விசம் கலந்து குடித்து, அருகில் உள்ள வாய்க்கால் கரையில் மயங்கி விழுந்து கிடந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்ஆனால் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கோபி போலீசார் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.