கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி ஓம்சக்தி நகரில் பல் மருத்துவர் வீட்டின் பீரோவில் இருந்த 17 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதுஓம்சக்தி நகரை சேர்ந்தவர் குமாரசாமி, சவுண்டீஸ்வரி தம்பதியர். பல் மருத்துவர்களான இருவரும் வீட்டின் அருகிலேயே பல் மருத்துவமனை வைத்து நடத்தி வருகின்றனர். குமாரசாமியும், அவரது மனைவியும் மருத்துவமனைக்கு சென்றனர்சிறிது நேரத்திற்கு பிறகு சவுண்டீஸ்வரி வீட்டிற்கு சென்ற போது,வீட்டின் முன் பக்க கதவு திறக்கப்பட்டு இருப்பதும்,வீட்டின் உள் அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்து 17 சவரன் நகை 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி ஓம்சக்தி நகரில் பல் மருத்துவர் வீட்டின் பீரோவில் இருந்த 17 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam