கோபிசெட்டிபாளையத்தில் மாவட்ட சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கைதிகள் அடைக்கப்படுகின்றனர். இச்சிறையில் தற்போது 125 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளை அவ்வப்போது கைதிகளின் மனைவி மற்றும் உறவினர்கள் பார்த்துச் செல்வது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், இச்சிறையில் பணிபுரியும் சிறைக்காவலர் ஒருவர் சிறைக் கைதிகளின் மனைவி மற்றும் உறவினர்களின் செல்போன் எண்களைப் பெற்று தொடர்ந்து பேசி வருவதாக கோவை சிறைத்துறை நிர்வாகத்திற்கு புகார் சென்ற வண்ணம் இருந்தது. இது தொடர்பாக விசாரணை செய்வதற்காக கோவையிலிருந்து சிறை விஜிலென்ஸ் சப்இன்ஸ்பெக்டர். கணேசன் தலைமையில் இன்று கோபி மாவட்ட சிறைக்கு வந்து சம்பந்தப்பட்ட சிறைக் கைதியிடம் விசாரணை செய்தனர்,
இதுகுறித்து கோபியில் உள்ள சிறைத்துறையினரிடம் கேட்ட போது கோவையிலிருந்து வந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் தங்களது மாதாந்திர ஆய்வு பணிக்காக வந்து சென்றதாக கூறினர். இதனால், இங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறை காவலர் ஒருவர் கைதிகளின் உறவினர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து சிறைத்துறை விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam