

குடிநீர் குழாய் அமைத்திட கோபிசெட்டிபாளையம் SDPI கட்சி கோரிக்கை….!”
கோபிசெட்டிபாளையம் வாய்க்கால்ரோடு பகுதியில் அமைந்துள்ள பூங்கா குடிநீர் தேக்க நிலையம் காம்ப்பவுண்டு சுவரின் வெளிப்புறத்தில் குடிநீர் குழாய் பல ஆண்டுகளாக இருந்து வந்ததை கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி விட்டது,
இதன் காரணமாக இப்பகுதி வாழ் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியதை கவனத்தில் கொண்டும்..
மேலும் லாடப்பட்டரை நாகூர் ஆண்டகை தர்கா (நினைவு) இடத்தின் அருகில் உள்ள பாலத்தின் அருகில் பிரதான குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு பெருமளவு குடிநீர் வீணாவதை தடுக்க வலியுறித்தியும்,
SDPI கட்சி கோபி நகர கமிட்டியின் சார்பில் உடனடியாக போர்க்கால அடிப்படையில் ஏற்கனவே இருந்த இடத்தில் பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டி கோபி நகர்மன்றத் தலைவரிடம் கோபி SDPI கட்சியின் நகரத் தலைவர் S.ஷாருக் அவர்கள் தலைமையில் மனு அளிக்கப்பட்டது,
நகர்மன்றத் தலைவர் N.R .நாகராஜ் அவர்கள் உடனடியாக ஆவண செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து நன்றி தெரிவித்து வந்தோம்.
இந்நிகழ்வில் ஈரோடு வடக்கு மாவட்ட துணைத் தலைவர் A. அஜ்மல் ஹுஸைன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சையது முஸ்தபா மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் A. தஸ்தகீர் அலி ,கோபி சட்டமன்ற தொகுதி செயலாளர் S. சர்ஜித் ரஹ்மான் , கோபி நகர செயலாளர் M.கோபி யாசின் நகர செயற்குழு உறுப்பினர் M. முகமது யாசர் , SDTU மாவட்ட செயலாளர் சகாப்தீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவண்,
தகவல் தொழில் நுட்ப அணி (ஐடி விங்)
எஸ்.டி.பி.ஐ. கட்சி
ஈரோடு வடக்கு மாவட்டம்.