கோபிசெட்டிபாளையம் அருகே கீழே கிடந்த நான்கரை லட்சம் மதிப்புள்ள வரைவோலைகளை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த கவுன்சிலருக்கு பாராட்டு.

கோபிசெட்டிபாளையம் அருகே கீழே கிடந்த  நான்கரை லட்சம் மதிப்புள்ள வரைவோலைகளை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த கவுன்சிலருக்கு பாராட்டு.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கச்சேரி மேடு பகுதியில் கோபி 22 வது வார்டு கவுன்சிலர் அக்கிம் என்பவர் சென்று கொண்டிருந்த போது கீழே வரைவோலைகள் இருப்பதை கண்டு அதை எடுத்து கோபி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்வதில் அது குடிசை மாற்று வாரியத்திற்கு அனுப்பக்கூடிய வரைவோலைகள் என்பது தெரியவந்தது.

மேலும் இந்த வரைவோலைகளை அரக்கன்கோட்டை குடிசை மாற்று வாரியத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் நல்ல கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் திருப்பூரில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் வழியில் கச்சேரி மேடு பகுதியில் தவறவிட்டதும்,

இந்த வரைவோலைகள் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வேண்டி பயனாளிகள் அளித்த தொகையினை வரைவோலையாக எடுத்து திருப்பூரில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்திற்கு கொண்டு சென்றதும் தெரியவந்துள்ளது,

அதனை தொடர்ந்து கார்த்திக்கை காவல் நிலையம் வரவழைத்து நான்கரை லட்சம் மதிப்புள்ள வரைவோலைகளை அவரிடம் ஒப்படைத்தார்,

அதனைத் தொடர்ந்து தவறவிட்ட நான்கரை லட்சம் மதிப்புள்ள 5 வரைவோலைகளை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த கோபி 22 வது வார்டு கவுன்சிலர் அக்கீம் என்பவருக்கு காவல்துறையினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்