



நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை வீண் தாமதம், வீண் செலவுகள், இல்லாமல் சுமுகமாக தீர்க்க சமரச மையம் சமரச மையம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இதன் செயல்பாடுகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது,
அந்த வகையில் இன்று கோபி கோபி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமராசத் தேர்வு மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது ,
இந்த விழிப்புணர்வு பேரணியை சமரச தீர்வு மையம் மற்றும் கோபிசெட்டிபாளையம் மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார், மேலும் இந்த நிகழ்ச்சியில் தனியார் சட்டக் கல்லூரி கூட்டமைப்பின் தலைவர் சிந்து ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர், இந்த விழிப்புணர்வு பேரணியில் அரசு மற்றும் தனியார் வழக்குரைஞர்கள்,நீதிபதிகள், மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாகச் சென்றனர்,
இந்த ஊர்வலமானது கோபி கச்சேரி மேட்டில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி, கச்சேரி மேடு , எம்.ஜி.ஆர் சிலை,மார்க்கெட், சிக்னல் வழியாக மீண்டும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை அடைந்தது,
இந்த ஊர்வலத்தில் சமரச மையம் குறித்து விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது.