ஈரோடு மாநகராட்சி 1-ம் மண்டலத்துக்குட்பட்ட நான்காவது வார்டு பொதுமக்களுக்காக பாவாய் தண்ணீர் பந்தல் பகுதியில் அமைந்துள்ள மகா மஹால் திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், மண்டல தலைவர் ப.க.பழனிச்சாமி, மாமன்ற உறுப்பினர் மங்கையர்கரசி பிரகாஷ், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பலனடைந்த பயனாளருக்கு சான்றிதழ் வழங்கினார்கள். மேலும் இந்த சிறப்பு திட்ட முகாமிற்கு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பொன்னையன், ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம், திமுக பிரமுகர் பிரகாஷ் ஆகியோர்கள் வருகை புரிந்து பொது மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும் வெயிலின் தாக்கம் அதிகமான காரணத்தினாலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமான காரணத்தினாலும் மாநகராட்சி அதிகாரியிடம் மண்டல தலைவர் ப.க.பழனிச்சாமி கேட்டுக்கொண்டதன் படி உடனடியாக நிழல் பந்தல் அமைக்கப்பட்டது. சிறப்பு திட்ட முகாமில் பயன் பெற வந்த பொது மக்களுக்கு தேநீர் மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.
ஈரோடு மாநகராட்சி 1-ம் மண்டலத்துக்குட்பட்ட நான்காவது வார்டு பொதுமக்களுக்காக பாவாய் தண்ணீர் பந்தல் பகுதியில் அமைந்துள்ள மகா மஹால் திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam