ஈரோடு மாவட்ட அளவிலான 14, 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கையுந்து பந்து போட்டி அண்மையில் குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதேபோல் 17 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கையுந்து பந்து போட்டிகள் சென்னிமலையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து ஒவ்வொரு பிரிவிலும் பல்வேறு அணிகள் கலந்து கொண்ட இப்போட்டிகளில் குமுதா பள்ளி மாணவ மாணவிகள் 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர் இதே போல் 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கையுந்து பந்து போட்டியில் குமுதா பள்ளி மாணவியர் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்ற மாணவ மாணவியரை பள்ளித் தாளாளர் திரு.ஜனகரத்தினம் ,துணைத் தாளாளர் திருமதி சுகந்தி ஜனகரத்தினம், செயலர் டாக்டர் அரவிந்தன், இணைச் செயலர் டாக்டர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் திரு.பாலபிரபு,முதல்வர் திருமதி.மஞ்சுளா, துணை முதல்வர் திருமதி.வசந்தி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.