.கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கூதம்பி பகுதியில் தெரு நாய்கள் கடித்ததில் 12 ஆடுகள் பலி.- தெரு நாய்கள் கடித்த 20 ஆடுகளை திங்களூர் – கோபி சாலையில் வைத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கூதம்பி பகுதியில் தெரு நாய்கள் கடித்ததில் 12 ஆடுகள் பலி.- தெரு நாய்கள் கடித்த 20 ஆடுகளை திங்களூர் – கோபி சாலையில் வைத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கூதாம்பி பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கூதாம்பி பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் வளர்த்து வந்த பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 16 ஆடுகளை தெருநாய்கள் கடித்துக் குதறி உள்ளது மேலும் அருகில் உள்ள மாரப்பன் என்பவர் வளர்த்து வந்த 4 ஆடுகளையும் தெரு நாய்கள் கடித்து உள்ளது.
இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் நாய்களை விரட்டி விட்டு பார்க்கும்போது தெரு நாய்கள் கடித்த 20 ஆடுகளில் 12 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.மேலும் 8 ஆடுகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறது.
தெரு நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் உயிரிழந்த ஆடுகளை வாகனத்தில் ஏற்றி கோபி – திங்களூர் சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் ஆடுகளை அவ்வப்போது கடித்து கொள்ளும் நாய்களை கட்டுப்படுத்த கோரியும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்து வந்த திங்களூர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சாலை மறியல் போராட்டம் காரணமாக திங்களூர் – கோபி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.