கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் யூனியன் கவுன்சிலர் அவரது மனைவி உட்பட மூன்று பேர் மீது புள்ளப்பநாய்க்கன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் புகார் அளித்துள்ளார்.
கோபி அருகே உள்ள புள்ளப்பநாய்க்கன்பாளையம் ஊராட்சியில் நேற்று முன் தினம் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்காரன் தலைமையில் ஏளூரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஊராட்சியின் வளர்ச்சி பணிகள்
, வரவு செலவினங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கிராம சபா கூட்டத்தில் படிவம் 30 என்ற ஊராட்சியின் வரவு, செலவினங்கள் குறித்த விபரங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர் பகிராம மக்களின் பார்வைக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் சமூதாய கூடத்தில் வைக்கப்பட்டு இருந்தது.கூட்டம் முடிவுற்ற பின்னர் அங்கு வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் பேனர் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் பங்களாபுதூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில் ஊராட்சியின் சார்பில் வைக்கப்பட்டு இருந்த படிவம் 30 என்ற பிளக்ஸ் பேனரை அதிமுகவை சேர்ந்தவரும் டி.என்.பாளையம் யூனியன் 1 வது வார்டு கவுன்சிலருமான தர்மன் என்கிற கே.வி.நடராஜன், அவரது மனைவி சங்கீதா, செல்வம் என்கிற கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் எடுத்து சென்று இருப்பதாக புகார் அளத்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யூனியன் கவுன்சிலர் தர்மன் என்கிற நடராஜ் மீது ஏற்கனவே யூனியன் சேர்மேன் தேர்தலின் போது வாக்கு பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ள நிலையில் தற்போது ஊராட்சி சார்பில் வைக்கப்பட்டு இருந்த பேனரை எடுத்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.