

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள அத்தாணி பேரூராட்சி நிர்வாகம் பவானி ஆற்றில் பேரூராட்சி கழிவுகளை கொட்டி சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதை கண்டித்து அந்தியூர் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் தனிப்பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட, நீர் மாசுபாட்டை தடுக்க வேண்டிய பேரூராட்சி நிர்வாகமே சட்டத்தின் மீது ஆற்று நீரை மாசுபடுத்துவது சரியா எனவும், பவானி ஆறு மாசுபடுவதை தடுக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்,
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், அத்தாணி பேரூராட்சியில் குப்பைகள் சரியாக பராமரிக்கப்படவில்லை எனவும், குப்பைகளை பவானி ஆற்றில் கொட்டுவதன் மூலம் நீர் மாசுபாடு ஏற்பட்டு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் குற்றம் சாட்டி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் தலைமை வக்கீல் சக்திவேல். சிறப்புரை பி ஜி மோகன் குமார் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் எம் செந்தில் குமார் மாவட்டத் தலைவர். உத்திர சாமி மாவட்ட துணை தலைவர். மாவட்ட பொதுச் செயலாளர் காவத்து கார்த்திகேயன் ஜெயராமன் மற்றும் மண்டல் தலைவர்கள் பொறுப்பாளர்கள் த கலந்து கொண்டனர்