தன்னை தானே கழுத்தை அறுத்துக்கொண்ட நபரால் பரபரப்பு கடத்தூர் அடுத்த சாணார்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (47) இவருக்கு சஞ்சய் மற்றும் மகள் பரணி என இரு குழந்தைகள் உள்ளனர் இவர் மது போதைக்கு அடிமையானதால் மனைவியை பிரிந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக தாய் ராமாயாள் (70) உடன் வசித்து வருகிறார்இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தன்னை தானே கழுத்தை அறுத்துக் கொண்டு சாணார்புதூர் பேருந்து நிலையத்தில் வந்து அமர்ந்துள்ளார் இது குறித்து அக்கம் பக்கத்தினர் அவரது தாய் ராமாயாள் காணவில்லை எனவும் அவரது மகன் சரவணக்குமார் கழுத்தை அறுத்துக்கொண்டு பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருப்பதாக கடத்தூர் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தனர்இது குறித்து பேருந்து நிலையத்தில் கழுத்தில் ரத்தக்காயத்துடன் இருந்த சரவணக்குமாரை காவல்துறையினர் விசாரிக்கும் பொழுது அவர் பேச முடியாமல் நான் என் தாயாரை கொள்ளவில்லை எனவும் கிணற்றில் உள்ளே கிடக்கிறார் என்று பேப்பரில் எழுதிக் கொடுத்துள்ளார்உடனடியாக சரவணக்குமாரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் அதனைத் தொடர்ந்து அவர் அளித்த தகவலின் பெயரில் நம்பியூர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் தேடிப் பார்த்தனர் 30 அடிக்கு மேல் கிணற்றில் இருந்ததால் மோட்டார் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றிய பிறகு காலை 7 மணி அளவில் ராமாயாள் (70) உடல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டது சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் சம்பவம் குறித்து கடத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்இதில் கழுத்து பகுதியில் பலத்த காயம் அடைந்த சரவணகுமார் கோபி அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.முதல்கட்ட விசாரணையில் மது அருந்த பணம் தரவில்லை எனக்கூறி சரவணக்குமார் அவரது தாயார் ராமாயாள் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது இதில் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் தாய் ராமாயாளை தள்ளி உள்ளார் இதில் கிணற்றில் விழுந்த ராமாயாளை மீட்க்க சரவணக்குமார் கிணற்றில் குதித்துள்ளார் அவரை மீட்க்க முடியாததால் கிணற்றில் இருந்து வெளியே வந்த சரவணகுமார் அருகில் உள்ள வீட்டிற்க்கு சென்று கத்தியை எடுத்து தன்னை தானே கழுத்தை அறுத்து கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது