கெட்டிச்செவியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கெட்டிச்செவியூரில்.முப்பெரும் விழா மற்றும் நூற்றாண்டு விழா ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

The Panchayat Union Primary School under Ketticheviyur Panchayat, in Ketticheviyur, held a grand celebration and centenary celebration. The annual function and sports festival were held in a grand manner.
InShot 20250330 094453566
InShot 20250330 094514738

கெட்டிச்செவியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கெட்டிச்செவியூரில்.முப்பெரும் விழா மற்றும் நூற்றாண்டு விழா ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ஜே. சித்ரா அவர்கள். வரவேற்றார் இவ்விழாவிற்கு நம்பியூர் வட்டார கல்வி அலுவலர் திருமதி.ஸ்ரீ தேவி அவர்கள். குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

InShot 20250330 094626998
InShot 20250330 094657377
InShot 20250330 094727327

இவ்விழாவில் கெட்டிசெவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு K.M. மகுடேஸ்வரன் அவர்கள். கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றியும், வாழ்த்துரை வழங்கியும் பரிசுகள் வழங்கியும் சிறப்பித்தார்.

விழாவிற்கு J.V. மில் மேலாளர் திரு பொன் விஸ்வநாதன் அவர்கள் விளையாட்டுப் போட்டிக்கான பரிசுகளை குழந்தைகளுக்கு வழங்கினார். கொளத்துப் பாளையம் திருமதி.சரஸ்வதி பழனிச்சாமி அவர்களின் புதல்வர் திரு. ப. சிவக்குமார் (U.S.A)அவர்கள் அனைத்து கல்வி செயல்பாடுகளுக்கும் குழந்தைகளுக்கு கேடயம் வழங்கி சிறப்பித்தார்.

இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு ரங்கராஜ் அவர்கள்.ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்.

மேலும் இவ்விழாவில் கெட்டிச் செவியூர் அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளியின் SMC கல்வியாளர் திரு சம்பத்குமார் அவர்கள், கெட்டிச்செவியூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் PTA துணைத் தலைவர் திரு P. சாமிநாதன் அவர்கள், நம்பியூர் வட்டார வள மேற்பார்வையாளர் திரு செல்வராஜ் அவர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், அருகாமை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், இப்பள்ளியின் SMC தலைவி திருமதி ராசாத்தி அவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர்கள் முன்னாள் மாணவர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

பள்ளியின் உதவி ஆசிரியர்கள் திருமதி.பா சம்பூர்ணம் அவர்கள்.மற்றும் திருமதி .எஸ் குடியரசி அவர்கள்.ஆகியோர் விழாவிற்கு வருகை புரிந்த மற்றும் நன்கொடை வழங்கிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்