காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தில் கூட்டணி கட்சியில் உள்ள காங்கிரசிடமிருந்து தண்ணீரை பெற முடியாத ஒரு அரசு தமிழ்நாட்டில் இருந்து கொண்டுள்ளது – பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்குவதாக தெரிவித்து அதனையும் திமுக அரசு வழங்கவில்லை என கோபிசெட்டிபாளையத்தில் கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.


கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையத்தில் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி, அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது,


இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு டி.என்.பாளையம் கிழக்கு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.


இந்த விழாவில் கிழக்கு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கள்ளிப்பட்டி பங்களாபுதூர்; பெருமுகை, கொண்டயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான அதிமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டு கழக உறுப்பினர் அட்டைகளை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,
காவிரி நதிநீர் விவகாரத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டு அதற்காக போராடிய தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆனால் தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தில் கூட்டணி கட்சியில் உள்ள காங்கிசிடமிருந்து தண்ணீரை பெற முடியாத ஒரு அரசு தமிழ்நாட்டில் இருந்து கொண்டுள்ளது என்றும், காவிரி விவகாரம் குறித்து திமுகவினர் அம்மாநில முதல்வரை சந்திக்க வில்லை எனவும்,
கண்ணீர் சிந்துகின்ற விவசாயிகளின் கண்ணீரை திமுக அரசு துடைக்க முடியவில்லை , இயற்கை துடைத்துக் கொண்டுள்ளது, இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும் நாள் தான் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் எனவும், அந்த நாளை நாம் எதிர்பார்த்து காத்து உள்ளோம் என்றார்,
பின்னர் மூன்றறை ஆண்டு காலம் ஆட்சி செய்யும் திமுக அரசு இதுவரை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கவில்லை, டேப் வழங்குவதாக தெரிவித்து அதனையும் திமுக அரசு வழங்கவில்லை, மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதாகவும்,
அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபி அருகே உள்ள சைபன் புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிக்கு திமுக சார்பில் பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது, இதனால் கோபிசெட்டிபாளையம் நகரப் பகுதிக்கு வரும் பள்ளி கல்லூரி மாணவர்கள் சரியான நேரத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து சரியான நேரத்தில் பேருந்து இயக்க வேண்டும் என அதிமுக சார்பில் வேண்டுகோள் வைத்து அதற்கான நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.