நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கெட்டிசெவியூர் தாழ்குனி, கோசனம் ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நேற்று அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.


முகாமிற்கு நம்பியூர் வட்ட தாசில்தார் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார்.
முகாமில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இ – சேவை மையம், தமிழ்நாடு மின்சார வாரியம் , காவல்துறை, வேளாண்மை ,உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை துறை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை ,உள்ளிட்ட 15 துறை சார்ந்த அதிகாரிகள் 44 திட்டங்களுக்கு மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
எழுதலாம்


காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 5 ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் மனுக்களை கொடுத்து பயன்பட்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர்கள் கெட்டி செவியூர் மகுடேஸ்வரன், தாழ்குனி செந்தில்குமார், கோசனம் திருமூர்த்தி மற்றும் நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரஸ்வதி, சாந்தி ஆகியோர் செய்தனர்.முன்னதாக சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவரும் நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளருமான செந்தில்குமார் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.