

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வரும் கல்வியாண்டில் முதல் வகுப்பு சேர உள்ள மாணவ மாணவிகளுக்கு கோபி மாவட்ட கல்வி அதிகாரி திருநாவுக்கரசு மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கியும், கல்வி உபகரனங்கள் வழங்கியும் உற்சாகமாக வரவேற்றனர், மேலும் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியின் புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர், இந்தப் பள்ளியில் அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டுள்ளது, இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அடுத்த ஆண்டு முதல் வகுப்பு சேர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் வகுப்பு சேர உள்ள மாணவ மாணவிகளுக்கு கோபி மாவட்ட கல்வி அதிகாரி திருநாவுக்கரசு மாலை அணிவித்து இணைப்புகள் வழங்கியும் கல்வி உபகரணங்களையும் வழங்கியும் உற்சாகமாக வரவேற்றார்.அதனைத் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் அடுத்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு சேர்ந்துள்ள மாணவ மாணவிகள் உட்பட சுமார் 300க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பொதுமக்களிடையே மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது, இந்த விழிப்புணர் கூட்டத்தில் கோபி மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.