கோபியில் 33வது ஆண்டு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா..இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவினை ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கோபி நகர இந்துமுன்னணியின் சார்பாக 33-ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்து எழுச்சித் திருவிழாவாக செப்டம்பர் 05 முதல் செப்டம்பர் 7 வரை கோபி நகர பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவின் நிறைவாக விசர்ஸன ஊர்வலமானது மேளதாளங்கள்முழங்க பல்வேறு தமிழக கலாச்சார கலை நிகழ்ச்சிகள், 20 அடி உயர் வீரஆஞ்சநேயர் ரதம், 108 பெண்கள் விநாயகர் சிலைகளுடன் அணிவகுக்கவிசர்ஜன விநாயகர் திருமேனிகள் கோபி பச்சைமலை திருப்பணிக் குழுத்தலைவர், சேந்தன்-கந்தன் குரூப்ஸ் பி கே ஈஸ்வரன் அவர்களால் சீதா கல்யாண மண்டபத்திலிருந்து காவிக் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டு ஜீவா செட்,புதுப்பாளையம் பிரிவு, பஸ் நிலையம், சிக்னல், மார்க்கெட், எம்.ஜி,ஆர் சிலை,கடைவீதி, தேர்வீதி, வாய்க்கால் ரோடு வழியாக சென்று சந்தியா வனத்துறைவாய்க்காலில் கரைக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக நிறைவு விழா பொதுக்கூட்டமானது எம்.ஜி.ஆர். சிலை அருகே இந்து முன்னணியின் ஈரோடு மேற்கு மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், இந்து அன்னையர் முன்னணி மாவட்டச் செயலாளர் குரு ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் திருமதி.கீதா ரவீந்திரன் Dr.சித்ரா கணேசன், லோகிதா வெள்ளியங்கிரி, வழக்குரைஞர் கீர்த்தனா சித்தார்த் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக Dr. ரவீந்திரன், சுபி தளபதி, மகாலிங்கம் ராமசாமி, சிற்பி மகேஸ்வரன், குமார், மனோஜ்குமரன், முருகையன், சுரேந்தர் Ex Army ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பொதுக் கூட்டத்தில் இந்து முன்னணி பேரியக்கத்தின் மாநிலசெயலாளர் வி எஸ் செந்தில்குமார் சிறப்புரையும், பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்.விழா ஏற்பாடுகளை இந்து முன்னணியின் கோபி நகர செயலாளர் சந்திரன், கோபால், துணைத்தலைவர்கள் பால்ராஜ், பூக்கடை முருகன், ஆனந்த், அர்ஜூன், வசந்த ரூபன் ஆகியோர் உடனிருந்து செய்தனர்.
கோபியில் 33வது ஆண்டு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam