டிஜிட்டல் கிராப் சர்வே பணியை செய்ய தேவையான அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் உபகரணங்கள் செய்து தருவதோடு இதுவரை செய்த பணிக்கு உண்டான தொகையை உடனே கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் என – கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.


கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த செயற்குழு கூட்டமானது நடைபெற்றது


இந்த செயற்குழு கூட்டத்தில், நகர அளவில் தல வரி எனப்படும் கிரவுண்ட் ரெண்டு வசூலிக்கும் பணியினை கிராம நிர்வாக அலுவலர்கள் செய்து வருவதாகவும், ஆனால் தல வரி கணக்கிட தேவைப்படும் ஆவணங்களான நகர நில அளவை பதிவேடு மற்றும் நில அளவைப் பணியினை சர்வே துறையினர் செய்து வருவதாகவும்,


ஆவணங்கள் மற்றும் அளவைப் பணிகள் சர்வே துறையிடம் இருப்பதால் வரி வசூல் செய்வதில் களப்பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் பெரும் இன்னல்களை அனுபவிப்பதோடு வரி வசூல் செய்வதில் அதிக அளவில் நிலுவைகளும் ஏற்படுவதாகவும், தல வரி வசூல் செய்வதில் ஏற்படும் இன்னல்களைத் தவிர்க்க ஆவணங்கள் பராமரிப்போடு நகர நில அளவைப் பணிகளை கிராம நிர்வாக அலுவலர்களே செய்யும் போது வரி வசூல் நிலுவை இனங்கள் குறைந்து அரசிக்கான வருவாய் பெருகும் எனவும்,


எதிர்கால மக்களின் நலனுக்காக நகர அளவை, நகர நில அளவை ஆவணங்கள், மற்றும் நில அளவை பணியோடு நகர நில அளவை முழு பட்டா மாறுதல் பணியையும் கிராம நிர்வாக அலுவலர்களே செய்ய உரிய ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் எனவும்,


டிஜிட்டல் கிராப்ஸ் சர்வே என்பது மத்திய அரசு சார்பான பணியாகும் இந்த பணியானது அனைத்து மாநிலங்களிலும் வேளாண்மை துறையினரே செய்து வருவதாகவும், தமிழ்நாட்டில் நிலம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் வருவாய் துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர்களே கையாண்டு வருவதால் இந்த பணியை செய்ய தமிழக அரசு கிராம நிர்வாக அலுவலர்களையே நிர்ப்பந்திப்பதாகவும், கடந்த வருடம் செய்த பணிகளுக்கான தொகையோ, பணியை துரிதப்படுத்த தேவைப்படும் உபகரணங்களையோ இதுவரை தமிழக அரசு செய்து தரவில்லை எனவும்,
தமிழக அரசு டிஜிட்டல் கிராப் சர்வே பணியை செய்ய தேவையான அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் உபகரணங்கள் செய்து தருவதோடு இதுவரை செய்த பணிக்கு உண்டான தொகையை உடனே கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் எனவும்,
மேலும், வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலர்கள் மக்களுக்கு உண்டான பணி, மக்களுக்கும் அரசு நிர்வாகத்திற்கும் உண்டான பணி என இரு விதமான பணிகளையும் செய்து வருவதாகவும், அந்த பணிகளுக்கு உண்டான அடிப்படைக் கட்டமைப்பு தேவையான உபகரணங்களோ தளவாட வசதிகளோ தேவையான ஆட்களோ தரப்படுவது இல்லை எனவும்,
எதிர்கால கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகளை மேம்படுத்த தேவையான தொழில்நுட்ப வசதிகளோடு பணிகளுக்கு உண்டான ஊதிய உயர்வும் வழங்கப்பட வேண்டும், வசதிகள் செய்யும் பட்சத்தில் மக்களுக்கு உண்டான சேவைகள் உடனுக்குடன் செய்யப்படுவதுடன் கால விரயம் குறைந்து அரசிற்கான வருவாயும் பெருகும் ஆகையால் அரசு ஊதிய உயர்வினை செலவாக கருதாமல் எதிர்கால அரசின் வருவாய்க்கு முன் முதலீடாக கருதி மேம்படுத்தப்பட்ட ஊதிய உயர்வினை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் செய்ற்குழு கூட்டம் நடைபெற்றது.