கோபிசெட்டிபாளையம் அருகே வேலை வாங்கி தருவதாக கோவையில் இருந்து கோபிக்கு வரவழைத்து நண்பரின் மனைவிக்கு பாலியல் தொல்லை

The sex nuisance to a friend's wife, who comes from Covey to Kobe, who is buying a job near Kopicetipai

கோபிசெட்டிபாளையம் அருகே வேலை வாங்கி தருவதாக கோவையில் இருந்து கோபிக்கு வரவழைத்து நண்பரின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையின் கைது செய்து சிறையில் அடைத்தனர்
கோவை மாவட்டம் வடமதுரை, பி.ஜி புதூரில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் வசித்து வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் தற்போது வேலை இல்லாமல் இருந்துவந்துள்ளனர், இதில் இந்த நபரின் மனைவி நர்சிங் படித்துள்ளார். இதை அடுத்து அவர்களுக்கு தெரிந்த ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை சேர்ந்த தரன் (19) என்ற வாலிபரிடம் கணவன் – மனைவி இருவரும் தொலைபேசியில் பேசி வேலை இருந்தால் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளனர். இதை அடுத்து தரன் தான் வேலை வாங்கி தருவதாக அவர்களிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தரன் அவர்களிடம் போனில் பேசி நிதி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். தொடாந்து கணவன் – மனைவி இருவரும் கோவையிலிருந்து பஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களுக்காக தரன் மோட்டார் சைக்கிளில் காத்திருந்துள்ளார், 
கணவன் – மனைவி வந்ததும் அவர்களிடம் சிறிது நேரம் தரன் வேலை பற்றி பேசிக் கொண்டிருந்தார். பின்னர் தரன் அந்தப் பெண்ணை மட்டும் தனது மோட்டார் சைக்கிளில் அலுவலகத்தில் விட்டு விடுவதாக கூறி அழைத்துச் சென்றார். வேட்டைக்காரன் கோவில் கீழ்பவானி வாய்க்கால் பகுதிக்கு சென்றபோது தரன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி யாரும் இல்லாத இடத்துக்கு அந்தப் பெண்ணை அழைத்து சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.  
அந்தப் பெண்ணிடம் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக தரன் மிரட்டி உள்ளார். பின்னர் அந்தப் பெண் நடந்த விஷயம் குறித்து அழுது கொண்டே தனது கணவரிடம் கூறியுள்ளார். 

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கோபி காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார்; இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தரனை கைது செய்த காவல்துறையினர், தரனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். நண்பரின் மனைவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோபி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment