கோபி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட கலிங்கியம் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சரும், சட்ட மன்ற உறுப்பினருமான கே. ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டார்.


இதில் கலிங்கியம் ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 20லட்சம் மற்றும் ஊராட்சி நிதியின் கீழ் 10 லட்சம் என மொத்தம் 30 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை நடைபெற்றது.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் சட்ட மன்ற உறுப்பினருமான கே எஸ் செங்கோட்டையன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில் யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கோகிலா அருள் ராமச்சந்திரா கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.