கோபி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு.

Judgment of life imprisonment for wife and counterfeiting in the case of murdering her husband along with a counterfeiter near gobi

கோபி அருகே கள்ளக்காதலனுடன்  சேர்ந்து  கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு.

1720638156745756 0
1720638148579019 1

கோபி அருகே உள்ள கோட்டுப்புள்ளாம் பாளையம் பகுதியை சேர்ந்த   குமார் என்பவர் இந்துமதி  என்பவரை காதலித்து திருமணம் செய்த பின் சொந்த ஊரில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குமாரின் மனைவி இந்துமதி கணவரை பிரிந்து கோபியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.


இந்நிலையில் இந்துமதிக்கு தனது தாய் வீட்டின் அருகே வேலை செய்து வந்த ஸ்ரீதர் எனபவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.
இதனையடுத்து இந்துமதிக்கும் கணவர் குமாருக்கு ஏற்பட்டிருந்த பிரச்சனையை உறவினர்கள் பேசி சமாதானம் செய்து மீண்டும் கணவன் மனைவி இருவரும் குமாரின் சொந்த ஊரில் வசித்து வந்தனர்.
இதனிடையே இந்துமதி கண்வனுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் காதலன்  ஸ்ரீதருடன் கொண்டிருந்த நட்பை போனில் பேசியும். நேரில் சந்தித்தும் தொடர்ந்து வந்துள்ளார்..

இந்நிலையில் இந்துமதியின் கணவர்  குமாருக்கு தனது மனைவி வேறொருவருடன் பழகுவதை அறிந்து மனைவியை கண்டித்துள்ளார் .
இதனையடுத்துகடந்த 9.07.2020 அன்று கோபி அருகே உள்ள பள்ளத்தோட்டம் பகுதியில் சாக்கு பையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட  கொலை செய்யபட்டு கிடந்த உடல் ஒன்றை காவல் துறையினர் கைப்பற்றி விசாரனை செய்த போது கொலைசெய்யபட்டு இறந்த உடல் குமார் என்பதை கண்டுபிடித்தனர். 
இதனையடுத்து குமார் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல் துறை நடத்திய தீவிர விசாரணையில் கொலை செய்யப்பட்ட குமாரின் மனைவிஇந்துமதி தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் குமாரை கொலை செய்து அவரின் உடல் துண்டு துண்டாக வெட்டி சாக்கு பையில் மூட்டையாக கட்டிய பின் அந்த உடலை கள்ளக்காதலன் ஸ்ரீதரின் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் வைத்து ஊருக்கு வெளியே வீசியுள்ளது தெரியவந்தது.
தொடர்ந்து இந்துமதியையும் அவரது கள்ளக்காதலனான ஸ்ரீதர் ஆகியோரையும் நம்பியூர் காவல் துறையினர் கைது செய்து கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்

இந்த வழக்கு கோபியில் உள்ள மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது தொடர்ந்து இந்த வழக்குக்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில் இதில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி இந்துமதிக்கும் கள்ளக்காதலன் ஸ்ரீதர் என்பவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் சடலத்தை மறைத்ததற்காக இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தயாநிதி தீர்ப்பளித்தார்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment