கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவகள் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற 10 வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு 21 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு பெற்றோர்கள் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 21-23 தேதி வரை மத்திய அரசின் பஞ்சாயத் யுவா கிரிடா கேல் அபியான் சார்பில் மாநில அளவிலான 10 வது பைக்கா தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் கேரளா,ஒடிசா,உத்தரப் பிரதேசம், ஹரியானா,தெலுங்கானா,தமிழ்நாடு, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
இந்த மாநில அளவில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் சிலம்பம், கராத்தே, ஜூடோ, பாக்சிங் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது, இந்தப் போட்டிகளில் கோபிசெட்டிபாளையம் அகஸ்தியா மார்சியல் ஆர்ட்ஸ் மாணவர்கள் 19 பேர் கலந்து கொண்டனர்
கலந்து கொண்ட 19 பேரில் சிலம்பத்தில் 4 பேர் தங்கப்பதக்கமும், கராத்தே வில் 14 தங்கப்பதக்கமும், ஜூடோ விளையாட்டில் 3 தங்க பதக்கமும், பாக்சிங்கில் 1 தங்கப்பதக்கம் என மொத்தம் கலந்து கொண்ட 19 பேரும் 21 தங்கப்பதக்கம் வென்றனர்.
தங்கப்பதக்கம் வென்ற மாணவர்கள் இன்று கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள காசிபாளையம் பகுதிக்கு வந்தபோது பேருந்தில் இருந்து இறங்கிய மாணவர்களுக்கு, பெற்றோர்கள் மற்றும் பயிற்றுநர்கள் மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கும் கேக் வெட்டியும், மலர் கொத்து கொட்டும் கொண்டாடினர்
இந்த விளையாட்டில் 70 – 75 கிலோ பிரிவில் பாக்சிங் விளையாட்டில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்ற கோபி குதிரைக்கால் பாளையம்; பகுதியைச் சேர்ந்த கௌதம் என்ற மாணவருக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் உதவி ஆய்வாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.