கோபிசெட்டிபாளையம் பஜனைகோவில் அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் சமூக வலைய தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.


கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள பஜனை கோவில் வீதி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலையை கடக்க முயன்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் அருகில் இருந்தவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


இதில் சாலையை கடக்க முயன்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோபி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்,
விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர் கோபி முருகன் புதூர் பகுதியை சேர்ந்த அர்ச்சுனன் என்பதும், அவர் தனது மகனை டி.என்.பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு பேருந்தில் அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்து வீடு செல்வதற்காக கோபி – ஈரோடு சாலையை கடக்க முயன்ற போது கோபி நோக்கி வந்து கொண்டிருந்த நஞ்சகவுண்டம்பாளையம் பகுதியில் சேர்ந்த சேகர் என்பவர் ஓட்டி வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.