கோபிசெட்டிபாளையத்தில் ஒரு நாளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Police arrested 4 people, including 2 women who sold alcohol as a legal antagonist on a day at gobichrttipalayam

கோபிசெட்டிபாளையத்தில் ஒரு நாளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

1719067893834308 0
1719067854919260 1

கள்ளக்குறிச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்

இந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் மது விற்பனை செய்து வருபவர்களை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்

1719067849174792 2
1719067843721697 3

அந்த வகையில் இன்று கோபிசெட்டிபாளையத்தில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஒரே நாளில் 2 பெண்கள் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தை ஒட்டி தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மொடச்சூர் சந்தைகடை அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது தெரியவந்தது
அதனைத் தொடர்ந்து இருவரை பிடித்து விசாரணை செய்ததில் மொடச்சூர் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த சேகர் என்பதும்,வடுகபாளையம்புதூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பதும் தெரிய வந்தது,
தொடர்ந்து அவர்களை கைது செய்த கோபி காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்,. 

தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் மீண்டும் மொடச்சூர் சந்தைகடை பகுதியில் சட்டவிரோதமாக  மது விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த பழனியம்மாள் மற்றும் கோமதி ஆகியோரை கோபி மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்