


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க
அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி வெங்கடாசலம் எம்எல்ஏ அவர்கள் ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி அத்தாணி பேரூராட்சியில்,
அத்தாணி SMP திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..
இந்நிகழ்ச்சியில்
அத்தாணி பேரூராட்சி மன்ற தலைவர் புனிதவள்ளி செந்தில் கணேஷ்,பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் லோகநாதன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்…
மேலும் இந்த முகாமில் தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்
உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, எரிசக்தித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட 13 துறைகளின் வாயிலாக 43 சேவைகள் வழங்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள் திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று வழங்குவது திட்டத்தின் நோக்கமாகும்.
தகுதியுள்ள அனைத்து குடும்பத்தினரையும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்த்து அவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், சமீபத்தில் 3 தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பிற அரசு உதவித் தொகை பெறும் குடும்பங்களில் உள்ள மகளிர், காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து அதில் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள மகளிர் மற்றும் அரசு வழங்கும் மானியத்தில் 4 சக்கர வாகனங்கள் வாங்கியுள்ள குடும்பத்தில் உள்ள மகளிர் ஆகியோர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள்.
இதற்கு முன்பு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க இயலாதவர்கள், மூன்று தளர்வுகளுக்கு பொருத்தமானவர்கள் மற்றும் அனைத்து தகுதியுடைய மகளிர் அனைவரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் விண்ணப்பம் அளிக்கலாம்.
இதற்காக கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று வழங்கப்படும் விண்ணப்பங்கள் இன்றே இணையதளத்தில் பதிவு செய்யப்படும். இம்முகாம்களில் அளிக்கப்படும் மனுக்களை முதல்வரால் கூர்ந்தாய்வு செய்யப்பட உள்ளது.இம்மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும். மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை, பெயர் மாற்றம், பேரூராட்சிகளில் வசிப்பவர்கள் வரி ரசீதில் முகவரி மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு, விண்ணப்பம் அளித்த அன்றே உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.