கோபிசெட்டிபாளையம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியார் கல்லூரி பேருந்தின் மீது சொகுசு கார் அதிவேகமாக மோதிய விபத்தில் காரில் பயணித்த கோவிந்தராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

A passenger in the car, Govindaraj, died on the spot after a luxury car crashed into a private college bus parked on the roadside near Gopichettipalayam.

கோபிச்செட்டிப்பாளையம்
அருகே உள்ள பொலவ காளிபாளையம் பகுதி சேர்ந்தவர் கோவிந்தராஜ்,, வயது 58,
இவர் சொந்த வேலை காரணமாக தன்னுடைய காரில் சித்தோட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கோபியை நோக்கி திரும்பி வந்துகொண்டிருத்தார்
அப்போது கோபிசெட்டிபாளையம் அடுத்த தாசம்பாளையம் என்னும் இடத்தில் காரில் வந்து கொண்டிருந்தபோது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்து சாலை ஓரத்தில் நிறுத்தியிருந்த தனியார் கல்லூரி பேருந்தின் பின்னால் அதிவேகமாக மோதிய வேகத்தில் கார் பேருந்தின் அடியில் சிக்கியது,
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கோவிந்தராஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்,
விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த கோபிசெட்டிபாளையம் போலீசார் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் வரவழைத்து 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், விபத்தில் பேருந்தின் கீழ் காரினுள் சிக்கிய கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விவசாயி கோவிந்தராஜ் தன்னுடைய உறவினரை சித்தோடு அருகே உள்ள செம்பூத்தாம்பாளையம் பகுதியில் அவரது வீட்டில் காரில் கொண்டு சென்று இறக்கி விட்டு அங்கிருந்து திரும்பியபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்