
நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஈரோடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம் (FOSTAC) நடைபெற்றது. இந்த பயிற்சி முகாம் நம்பியூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீதேவிபிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் உணவு ஹோட்டல், கேன்மீன், பேக்கரி, மளிகை என உணவு தொழில்களில் ஈடுபட்டிருப்போர் பங்கேற்றனர். இந்த பயிற்சி மூலம், உணவுப் பாதுகாய்பு நடைமுறைகள் மற்றும் தரநிலைகள் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டார்கள். இதில் 70-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.