கோபிசெட்டிபாளையம்; அடுத்துள்ள கள்ளிப்பட்டி காந்தி சிலை அருகே பங்களாபுதூர் போலீசார் வாகன தணிக்கையில் இருந்த போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் அந்த சோதனையில் வாகனத்தின் உள்ளே ஏராளமான ஆற்று மணல் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து மணல் கடத்தி வந்த வேன் மற்றும் அதில் வந்த நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கள்ளிப்பட்டி அடச பாளையத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகரன் , கணக்கம்பாளையம் புது காலனியை சேர்ந்த சுரேந்திரன், சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சசிகுமார், அடச பாளையத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன்,என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் நான்கு பேரும் கள்ளிப்பட்டி பகுதியில் உள்ள பவானி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக செல்வதுபோல இரவு நேரத்தில் பரிசலில் சென்று ஆற்றில் உள்ள மணலை திருட்டுத்தனமாக அள்ளி வந்து அதை மூட்டைகளாக கட்டி வாகனத்தில் கடத்தி சென்று அதை ஒரு மூட்டை மணல் 120 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வதாகவும் கூறப்படுவதை தொடர்ந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் ,75 மணல் மூட்டைகளுடன் ஆற்றில் மணல் அள்ளப்பயன்படுத்திய பரிசல் மற்றும் ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்த பங்களாபுதூர் போலீசார் பிடிபட்ட நான்கு பேரையும் வழக்கில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள பங்களாபுதூர் அருகே ஆற்று மணல் கடத்திய வழக்கில் முன்னாள் ராணுவவீரர் உள்ளிட்ட நான்கு பேர் கைது

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam