


எகோபிசெட்டிபாளையம் அருகே அரசுப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தின் மேற்கூறை இடிந்து விழுந்ததால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி…
புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்டி ஒரு ஆண்டு கூட நிறைவடையாத நிலையில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதால் பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்ப அச்சமடைந்துள்ளனர்
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் கடந்த ஆண்டு மாணவர்களின் வகுப்பறை வசதிக்காக இரண்டு தளங்களுடன் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது
இரண்டு தளங்கள் கொண்ட புதிய வகுப்பறை கட்டிடத்தின் ஒரு பகுதியில் உள்ள 7ம் வகுப்பு கட்டிடத்தில் 30குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்கள் பள்ளி விடுமுறைக்கு பின் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் வகுப்பறைக்கு வந்துள்ளனர் அப்போது வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூறை பூச்சு இடிந்து விழுந்து அங்கிருந்த எல் ஈடி திரை டிவி அருகே இருந்த நாற்காலி சேதமடைந்து கிடந்தது.
இந்த தகவலறிந்து அங்கு வந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்திக்கொண்டிருந்தனர் அப்போது கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்த செய்தியறிந்து அங்கு வந்த குழந்தைகளின் பெற்றோர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கட்டிடத்தின் உறுதித்தன்மையை பரிசோதித்து அதன் முடிவு தெரியும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து பெற்றோர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்
கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டை நிறைவு செய்யாத நிலையில் பள்ளிக்கூடத்தின் மேற்கூறை இடிந்து விழுந்த செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.