நம்பியூர் அடுத்த இடையாம்பாளையம் அரசு போக்குவரத்து கழகம் அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளார் அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தார்

Nambiur was the next accident

நம்பியூர் அடுத்த இடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவர் நம்பியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல தனது பணிக்கு செல்ல வீட்டில் இருந்து காலை 5 மணியளவில் புறப்பட்டு உள்ளார். அப்போது அரசு போக்குவரத்து கழகம் அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளார் அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பழனிச்சாமி பலத்த காயமடைந்தார்.
அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பழனிச்சாமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வரப்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்