கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் கோவையில் நடைபெற்ற ஓபன் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி சாதனை

Open International-scale Chilm Competition Adventure held at Covey, government school students from the gobi region

கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் கோவையில் நடைபெற்ற ஓபன் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு 15 தங்க பதக்கம்,12 வெள்ளி பதக்கம், 9 வெண்கல பதக்கம் என மொத்தம் 36 பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வென்று சாதனை படைத்து சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு பெற்றோர்கள் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்றனர்.

1722496666715544 1
1722496661011385 2

இதில் 2 வயது சிறுமி தனித்திறன் சிலம்பம் சுற்றும் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

1722496655226221 3
1722496650042081 4

கோவை மாவட்டம் எல் அண்ட் டி பைபாஸ் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த 27 ஆம் தேதி ஓபன் சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது, இந்த விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை, மலேசியா, இந்தியா உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

1722496643469927 5
1722496636806049 6

இந்த சர்வதேச அளவில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் சிலம்பம், கராத்தே, தனித்திறன் சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது, இந்தப் போட்டிகளில் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள வெள்ளாங்கோவில், கலிங்கியம்,கெட்டிசெவியூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்; செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளை சேர்ந்த சாம்பியன் வாரியர்ஸ் சிலம்பம் பள்ளி மாணவர்கள் இந்தியா சார்பில் 36 பேர் கலந்து கொண்டனர்

தொடுபுள்ளி எனப்படும் சண்டை பிரிவில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட மாணவர்கள் மொத்தம் 15 தங்க பதக்கம், 12 வெள்ளி பதக்கம், 9 வெண்கல பதக்கம் என மொத்தம் 36 பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வென்று சாதனை படைத்து உள்ளார்

இந்த விளையாட்டில் வெள்ளாங்கோவில் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரின் 2 வயது மகள் ஆதிரா, 5 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தனித்திறன் சிலம்பம் சுற்றும் போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்றும் மேலும் பரமேஸ்வரனின் கண்பார்வை இழந்த தாயார் சுமதி(60) மூத்தோர் பிரிவில் தனித்திறன் சிலம்பம் சுற்றும் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது,
பதக்கங்கள் வென்ற மாணவர்கள் இன்று கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள வெள்ளாங்கோவில் பகுதிக்கு வந்தபோது மாணவர்களுக்கு, பெற்றோர்கள் மற்றும் பயிற்றுநர்கள் மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து மேள தாளங்களுடன் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment