நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளரும், நம்பியூர் பேரூராட்சி தலைவருமான செந்தில்குமார் தலைமையில் ஒன்றிய திமுக அலுவலகத்தில் கலைஞர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

கலைஞரின் உருவ படத்திற்கு ஒன்றிய திமுக செயலாளர் செந்தில்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் குள்ளம்பாளையம் கே.கே.செல்வன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் கைலாஷ்குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து நம்பியூர் பேருந்து நிலையம் முன்பு கலைஞர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.


நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் அல்லாபிட்சை, மாவட்ட நெசவாளர் அணி தலைவர் சண்முகம், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரஙை துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம், செயற்குழு உறுப்பினர் கீதா முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் நம்பியூரில் 1001 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் நம்பியூரில் 1001 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஈரோடு் வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் குள்ளம்பாளையம் கே
கே.செல்வன் தலைமையில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் கைலாஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

முதல்கட்டமாக நம்பியூரில் உள்ள பூங்காவில் 101 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் குள்ளம்பாளையம் கே.கே.செல்வன், நம்பியூர் பேரூராட்சி தலைவரும், நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளருமான செந்தில்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
நிகழ்ச்சியில் இந்திரா மெடிக்கல்ஸ் துரைசாமி ,சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சக்திவேல், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் உமாசங்கர், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் சண்முகம், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் அல்லாபிட்சை, கவுன்சிலர் கண்மணி, மாவட்ட பிரதிநிதி இளங்கோ, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம், கீதாமுரளி, மருதாச்சலம், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.