கோபி அருகே உள்ள கிராமத்தில் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாக கூறி வந்த வாலிபர் மீது கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
கோபி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 15 வயது மகள் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த சிறுமியிடம் செவியூர் அருகே உள்ள செஞ்சிராப்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (25) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பழனிச்சாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி அருகே உள்ள கிராமத்தில் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாக கூறி வந்த வாலிபர் மீது கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam