எ

குஷ்புவின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை கண்டித்து கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் திரண்ட திதுகவினர், குஷ்புவின் உருவ சிலையை எடுத்துச்சென்று அண்ணா சிலை முன்பு உருவ பொம்மையை எரித்தும், குஷ்புவிற்கு எதிராக முழக்கமிட்டும், தமிழக பெண்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பினார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தடுப்பதற்குள் உருவ பொம்மையை எரித்த நிலையில், அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.