நம்பியூர் அருகே உள்ள ஒழலக்கோவில் ஊராட்சியில் புதிதாக ரேஷன் கடை அமைக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அதன் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு மலையபா ளையம் தொடக்க கூட்டுறவு வங்கி செயலாளர் கனகராஜன் தலைமை தாங்கினார். நம்பியூர் பேரூராட்சி 8-வது வார்டு தி.மு.க. செயலாளர் ஆனந்த்குமார் முன்னிலை வகித்தார். நம்பியூர் பேரூராட்சி தலைவரும், ஒன்றிய தி.மு.க. செயலாள ருமான மெடிக்கல் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததுடன், பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்
களை வழங்கினார்.
இதில் ஒழலக்கோவில் ஊராட்சி பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் பழனிச்சாமி, மகேஷ்குமார், தனசேகர், குப்புசாமி, துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒழலக்கோவில் ஊராட்சியில்புதிய ரேஷன் கடை திறப்பு

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam