வீசப்பட்ட நிலையில் பைக்கின் பின்னால் அமர்ந்து இருந்த சரண்யாவும், அபினயாவும் கார் சக்கரத்தில் சிக்கினர்இதில் அபினயாவிற்கு கால் துண்டான நிலையில் சரண்யாவிற்கு கால் முறிவு ஏற்பட்டது.இதில் மூன்று பேரும் படுகாயமடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் வழியிலேயே சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து அபினயாவும் கோகுல் ராஜூம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர.இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கு இருந்து தப்பிச்செல்ல முயன்ற கார் ஓட்டுநர் பழனிக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் 33 வயதான திணேஷ் எனபவரையும், அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் 28 வயதான லோகேஷ் உட்பட 3 பேர் காரில் இருந்துள்ளனர். 3 பேரும் குடிபோதையில் இருந்த நிலையில் அங்கு இருந்து தப்பிச்செல்ல முயன்ற போது பொதுமக்கள் திணேஸ் மற்றும் லோகேசை சராமாரியாக அடித்து உதைத்து கடத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர் காரில் இருந்த 3 நபர் அங்கிருந்து தப்பியோடினார். போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் இளம்பெண் பலியான நிலையில் மற்றொரு இளம்பெண்ணிற்கு கால் துண்டானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.