நம்பியூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொது மருத்துவ முகாம்
நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவம் மற்றும் எலும்பு மூட்டு தேய்மான பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதில் சேலம் அன்னபூரணி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை முகாமில் ஈடுபட்டனர்.இதன் துவக்க விழா நம்பியூர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் மெடிக்கல் செந்தில்குமார் மருத்துவ முகாமினை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் கலந்து கொண்டு பார்வையிட்டு இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் நம்பியூர் மாவட்ட பொது குழு உறுப்பினர் சென்னிமலை, திமுக கட்சி நிர்வாகிகள் மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை செயலாளர் முருகசாமி, திமுக 8வது வார்டு செயலாளர் ஆனந்தகுமார், பேரூராட்சி 15வது வார்டு உறுப்பினர் நந்தகுமார்,சங்கர்,திமுக ஒன்றிய துணைச் செயலாளர் வேலுச்சாமி, ராஜ்குமார், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.