கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டுச்செவியூரில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கெட்டிசெவியூர், பள்ளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னோருக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு வேதியல் பாட ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.
இவர் மாணவரிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீ முருகனிடம் புகார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் அளித்த தகவலின் அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் பள்ளியில் மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் கோபி மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி அரசு பள்ளி மாணவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் போக்ஸ் சட்டத்தில் வழக்கு பதிவு

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam